• waytochurch.com logo
Song # 27468

ஆர்ப்பரிப்போம் நல ஆண்டிலே ஆற்புதமாய் ஈந்த ஆண்டிலே


கர்த்தர் நல்லவர் என ருசித்தேன்

கர்த்தரே என்றும் போதுமானவா

ஒரு நன்மையும் குறையின்றியே

ஒப்பற்ற நேசரென்னைக் காத்திட்டார் -ஆர்ப்பரிப்போம்
வந்த வனாந்திர வழியெல்லாம்

வாக்குத்தத் தத்தால் என்னைத் தேற்றினார்

ஆராயமுடியாத பாதையிலே

ஆச்சரியமாகவே நடந்ததினால் - ஆர்ப்பரிப்போம்
தந்தை மைந்தனை சுமந்தது போல்

தாங்கி சுமந்தாரே தோளின் மீதே

எந்தன் கேடகம் அரண் அவரே

எந்தன் அடைக்கலமும் அவரே -ஆர்ப்பரிப்போம்
ஆசீர்வாதமான ஆண்டதிலே

ஆசீர்வதித்து என்னை அனுப்பும்

ஆதிசயமாம் உம் கிருபையை

அடிமையில் விளங்க செய்யுமே -ஆர்ப்பரிப்போம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com