• waytochurch.com logo
Song # 27469

ஆர்ப்பரிப்போம் ஆனந்தமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்


அமைதலாயுமல்ல

அசதியோடும் அல்ல

இடி முழக்கத்தோடும்

எக்காள சத்தமாய் தொனித்திட - ஆர்
கைத்தாளங்கள் முழங்க

கர்த்தரைப் பாடி புகழ்ந்திடுவோம்

கரங்களை உயர்த்தி

கெம்பீரமாய் துதித்திடுவோம் - ஆர்
கஷ்டங்கள் வந்தாலும்

கர்த்தர் இயேசு விடுவிக்கிறார்

கூடவே இரப்பார்

கைத்தூக்கி கரை சேர்த்திடுவார் - ஆர்
பாவங்கள் போக்கினார்

சாப ரேகங்கள் நீக்கினார்

பாதையும் காட்டினார்

பரிசுத்தரோடு ஒன்றாக்கினார் - ஆர்
மரண பயம் திகிலும்

மலைபோல சூழ்ந்தாலும்

மாறாத கர்த்தர்

பெலன் தந்து எம்மை தேற்றுகிறார் - ஆர்
சீக்கிரம் வருவார்

சீயோனை சேர்ந்திடவே

சிங்காரத்துடனே

சீர் யேசு ராஜனை சந்திப்போம் - ஆர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com