• waytochurch.com logo
Song # 27473

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் இயேசு நமக்களித்த


கருணையாய் இதுவரை கைவிடாமலே

கண்மணிபோல் எம்மைக் காத்தாரே

கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்

கருத்துடன் பாடிடுவோம் - ஆத்துமாவே
படகிலே படுத்து உறங்கினாலும்

கடும்புயல் அடித்த கவிழ்த்தினாலும்

கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்

காத்தாரே அல்லேலூயா - ஆத்துமாவே
யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால்

எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்

இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே

என்றென்றுமாய் வாழ்வோம் - ஆத்துமாவே
பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்

அதி சீக்கிரத்தில் முடிகிறதே

விழிப்புடன் கூடி தரித்திருப்போம்

விரைந்தவர் வந்திடுவார் - ஆத்துமாவே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com