ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி ஆண்டவர் ஏசுவை வாழ்த்திடுவோம்
புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரை படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே - ஆனந்த
மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திர லோகம்
தூதரும் பாடி மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே - ஆனந்த
மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மாதேவ அன்பும்
மாறா விÞவாசமும் அளித்தாரே - ஆனந்த
அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே - ஆனந்த
கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் - ஆனந்த