• waytochurch.com logo
Song # 27479

ஆதியும் நீரே அந்தமும் நீரே மாறிடா நேசர் துதி உமக்கே


தூதர் போற்றும் தூயவரே

துதிகளின் பாத்திரா தேவரீரே

உந்தனின் சமுகம் ஆனந்தமே

உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் - ஆதியும்
வல்லமை ஞானம் மிகுந்தவரே

வையகம் அனைத்தையும் காப்பவரே

ஆயிரம் பேர்களில் சிறந்தவராய்

ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் - ஆதியும்
செய்கையில் மகத்துவம் உடையவரே

இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே

பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் - ஆதியும்
ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்

ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்

உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே

உத்தம தேவனை பணிந்திடுவோம் - ஆதியும்
ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்

பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்

மகிமையும் கனமும் துதிகளையே

செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம் - ஆதியும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com