• waytochurch.com logo
Song # 27480

ஆதாரம் நீர்தானய்யா எந்தன் துணையுமே நீர்தானய்யா


என்னோடு என்றென்றும் இருப்பீரய்யா

எந்நாளும் குறை நீக்கி காப்பீரய்யா -2
தீங்குகள் அணுகாமல் காத்தீரய்யா

நன்மைகள் அனுதினம் செய்தீரய்யா - 2
வார்த்தையாம் இயேசுவை அளித்தீரய்யா

பாவங்கள் நீங்கியே போனதய்யா - 2
ஆவியால் தினம் என்னை நிரப்பினீரே

எந்நாளும் தங்கியே தேற்றினீரே - 2
நல் பாத்திரமாய் என்னையும் வனைந்தீரையா

உம் போல என்னையும் மாற்றுமய்யா - 2
அழுகையில் என் குரலை கேட்டீரைய்யா

கரம் தாங்கி என்னையும் தூக்கினீரே - 2
சோதனை நேரத்தில் துணை நீரய்யா

வழுவாமல் தினம் காத்து ஜெயமீந்தீரே - 2
இப்பூவில் எந்தனை படைத்தீரய்யா

உம் துதி சொல்லி பாடி மகிழ்ந்திடவே - 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com