• waytochurch.com logo
Song # 27481

ஆத்தும நேசர் இயேசுவே ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்கவே


இந்த நல் விசுவாசத்தின் இன்ப தம்பதிகள் மேல்

உந்தனின் அன்புகரம் நீட்டிடும் தேவா

உந்தன் சித்தம் செய்துமே இன்ப நாடு செல்லவே

உன்னத ஈவுகள் தந்தருளுமே - எங்கள்
இன்ப துன்ப வேளையும் வாழ்வினிலும் தாழ்வினிலும்

இயேசுவே உந்தன் அன்பில் நிலைத்தோங்கியே

இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே

ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே - எங்கள்
கர்த்தனே கறைதிரை முற்றிலும் அகற்றியே

கற்புள்ள கள்னிகையைச் சேர்க்கும் நாளிலே

உந்தன் மணவாட்டியாய் இந்த மணமக்களும்

உம்முடன் வாழ்ந்திடும் பாக்கியம் ஈயுமே - எங்கள்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com