• waytochurch.com logo
Song # 27490

அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள்


ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ

ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்

சிறிதானதோ பெரிதானதோ

பெற்றபணி செய்து முடித்தோர் - அழகாய்
காடு மேடு கடந்து சென்று

கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள்

உயர்வினிலும் தாழ்வினிலும்

ஊக்கமாக ஜெபித்தவர்கள் ! - அழகாய்
தனிமையிலும் வறுமையிலும்

லாசரு போன்று நின்றவர்கள்

யாசித்தாலும் போஷித்தாலும்

விசுவாசத்தை காத்தவர்கள் - அழகாய்
ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம்

அழகாய் நிற்போர் வரிசையில் நான்

ஒர் நாளினில் நின்றிடவும்

இயேசுதேவா அருள்புரியும் ! - அழகாய்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com