அறுவடைக் கதிர்கள் செழித்திருக்க அதை அறுத்திட ஆள் இல்லையே
ஆத்துமாக்கள் மேல் அவர் தாகம் கொண்டார்
அவரிடம் தாருங்களேன்
சத்தியத்தின் மேல் உங்கள் வாழ்க்கை - அமைந்தால்
அது நிச்சயம் சிறந்திருக்கும் - அறுவடை
உள்ளங்களை நீ கொள்ளை கொள்வாய் - அதில்
இயேசுவை ஏற்றி வைப்பாய்
சிலுவை வழி அது சிறந்த வழி - இனி
இயேசுவே நமது கதி - அறுவடை
ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம் - அவன்
போற்றிடும் ஞானமுள்ளவன்
பாவ வழி அதை விட்டொழிப்பவன் - அவன்
தேவனின் தயை பெற்றவன் - அறுவடை