• waytochurch.com logo
Song # 27496

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு இயேசுவின் இனிய சத்தம் இன்று நீ கேளாயோ


மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே

நம்மை செய்பவராய் எங்கும் சென்றாரே

பாவம் மன்னித்தார் வியாதி அகற்றினாரே - அறுப்போ
பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்

பாவிகளின் நண்பர் அவன் இல்லம் சென்றாரே

மாசு அகற்றினார் பிதாவின் சித்தம் செய்தார் - அறுப்போ
ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே

அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்

ஆத்துமா நஷ்டமானால் என்ன லாபம் உண்டு - அறுப்போ
அக்கிரமம் பெருகுகின்றதே அன்பு தணிகின்றதே

வேலை ஆட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்

இராக்காலம் சமீபித்ததே விழிப்புடன் செயல்படுவோம் - அறுப்போ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com