• waytochurch.com logo
Song # 27498

அற்புத தேவனின் செய்கைகள் யாவுமே அற்புதமே என்றும் அற்புதமே


எகிப்தின் பாரம் விலகிடுதே

இருளும் நீங்கி ஒளி பெறுதே

அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி

இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே - அற்புத
சிவந்த கடலும் வழிவிடுமே

தடையாம் எரிகோ அகன்றிடுமே

கர்த்தரின் வார்த்தையின் வல்லமையாலே

அற்புதம் உந்தனில் வெளிப்படுமே - அற்புத
வறண்ட தாகம் தீர்த்திடவே

ஓங்கிய புயத்தை நீட்டினாரே

கன்மலை திறந்து தாகமே தீர்த்தார்

உந்தனின் தாகத்தை தீர்த்திடுவார் - அற்புத
குருடர் செவிடர் முடிவருக்கும்

சுகமே இயேசு அளித்தனரே

ஹியேசுவின் நாமம் ஔஷதமாகும்

ஆற்புத சுகமே அடைந்திடுவாய் - அற்புத
சீறும் கடலை அமர்த்தினாரே

சீடரின் பயத்தை அகற்றினாரே

உந்தனின் பயங்கள் யாவையும் நீக்கி

அற்புதர் ஜெயமாய் நடத்திடுவார் - அற்புத

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com