• waytochurch.com logo
Song # 27504

அனுப்பும் தேவா உம் ஆவியினை அடியார் மீதே இவ்வேளையிலே


சுட்டெரிக்கும் தேவ அக்கினியே

சுத்திகரிக்கும் எம்மை

குற்றங் குறைகள் கறைகளை

முற்றும் நீக்கி சுத்தம் செய்ய - அனு
பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள்மேல்

பலத்த காற்றாய் வந்தீர்

பலவீனர் எம் உள்ளத்திலும்

தேவ பெலன் பெற்றிடவே - அனு
மீட்கப்படும் நல் நாளுக்கென்றே

பெற்றஉம் ஆவிதனை

துக்கப்படுத்தாது பாதுகாத்து

தூய வழியில் நடந்திட - அனு
சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே

சத்தியம் சாற்றிடவே

புத்தியாய் நின்று யுத்தம் செய்ய

சக்தி ஈவீர் இந்நேரமே - அனு
இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து

இடைவிடா சேவை செய்ய

இரட்சகர் இயேசுவின் சாட்சியாக

பாரில் எங்கும் ஜீவித்திட - ஆன

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com