• waytochurch.com logo
Song # 27510

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே


பாவ சேற்றினில் வீழ்ந்தோரை

பரன் சுமந்து மீட்டாரே

தம் நாமத்தை நீ நம்பினால்

தளர்ந்திடாதே வா - அன்னை
மாய லோகத்தின் வேஷமே

மறைந்திடும் பொய் நாசமே

மேலான நல் சந்தோஷமே

மெய் தேவன் ஈவாரே - அன்னை
தேவ ராஜ்ஜிய பாக்கியமே

தினம் அதை நீ தேடாயோ

உன் தேவனை சந்தித்திட

உன் ஆயத்தம் எங்கே - அன்னை
ஜீவ புத்தகம் விண்ணிலே

தேவன் திறந்து நோக்குவார்

உன் பேர் அதில் உண்டோ இன்றே

உன்னை நிதானிப்பாய் - அன்னை
உந்தன் பாரங்கள் யாவையும்

உன்னை விட்டே அகற்றுவார்

உன் கர்த்தரால் கூடாதது

உண்டோ நீ நம்பி வா - அன்னை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com