• waytochurch.com logo
Song # 27511

அந்தோ கல்வாரியில் ஶி அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்கினார்


மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்

கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே

மாய லோகத்தோடழியாது யான்

தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே - அந்தோ
அழகுமில்லை சௌந்தரியமில்லை

அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க

பல நிந்தைகள் சுமந்தாலுமே

பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ
முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்

கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்

குருதி வடிந்தவர் தொங்கினார்

வருந்தி மடிவோரையும் மீட்டிடவே - அந்தோ
அதிசயம் இது இயேசுவின் நாமம்

அதினும் இன்பம் அன்பரின் தியானம்

அதை எண்ணியே நிதம் வாழுவேன்

அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே - அந்தோ
சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி

சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே

என்னைச் சேர்த்திட வருவே னென்றார்

என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் - அந்தோ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com