en thanimayil yesuvae ummai nambiduvaen enalumae என் தனிமையில் இயேசுவே
என் தனிமையில் இயேசுவே
உம்மை நம்பிடுவேன் எந்நாளுமே
இருளான பாதையில் ஒளியாக வந்தீரே
கரடான பாதையில் நீர் என்னை சுமந்தீரே
இயேசுவே நீர் போதுமே
இயேசுவே நீர் வாருமே
காலையில் எழுந்ததும் உம் பாதம் வந்தேன்
உந்தன் முகம் பார்க்கவே
மாலையில் உம் சத்தம் கேட்க
வாஞ்சிப்பேன் தகப்பனே
என்னோடு தினமும் பேசுமே
உந்தன் வார்த்தை என்னுள்ளே தாரும் என் இயேசுவே
நான் மருரூபம் அடைந்திடுவேன்
என் அறைக்குள் சென்று கதவை பூட்டி உம்மை நோக்கி கூப்பிடுறேன்
அப்பா நீர் என்னிடம் வாருமே
என் கண்ணீர் துடைத்து மகனே / மகளே என்றழைத்து தயவாக நினைத்தவரே
உம்மை போல் என்னை மாற்றுமே
உந்தன் அன்பு போதுமே வேறே எதுவும் வேண்டாமே
உம்மை முற்றிலும் நம்பிடுவேன்