endhan karunayin dheva எந்தன் கருணையின் தேவா
எந்தன் கருணையின் தேவா
வரம் தரும் நாதா
கனம் எல்லாம் உமக்கல்லவா
என்னை ஒருபோதும் மறவா
மகிமையின் மன்னவா
மெய் தெய்வம் நீர் அல்லவா
உம்மை பாடிடுவேன்
உம்மை போற்றிடுவேன்
என்றும் ஆர்ப்பரிப்பேன்
உம்மில் மகிழ்ந்திடுவேன்
வானமே அழிந்துபோனாலும்
பூமியே ஒழிந்துபோனாலும்
உந்தன் வார்த்தையோ ஒருநாளும்
மாறவே மாறா என்றுமே நிலைத்திருக்கும்
ஜீவனுள்ள வார்த்தை உம் வார்த்தை
பரலோகத்திற்கு அது மட்டும் பாதை
தினம் தினம் உம்மையே போற்றுகிறேன்
உமக்குள் மட்டுமே வாழுகிறேன்
எனது பிரியமும் நீரே
எனது ஆசையும் நீரே
குறைவான என் வாழ்வில்
நிறைவான பங்கு நீரே நீர்தானே
பாவமான என் வாழ்வில் தூய்மையாக்கும்
உம்மை போல நான் வாழ உதவி செய்யும்
தினம் தினம் உம்மையே போற்றுகிறேன்
உமக்குள் மட்டுமே வாழுகிறேன்