siru vayadhil irunthu sumanthavarae சிறு வயதில் இருந்து சுமந்தவரே
சிறு வயதில் இருந்து சுமந்தவரே
யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே
உங்க தோளில் இருந்த சுகமும்
உங்க முத்தத்தில் இருந்த அன்பும்
மறக்க முடியல
அத விட்டு வாழ தெரியல
உங்க அன்பு பெருசு
கிருபையும் பெருசு
ஆற்றி தேற்றி அரவணைக்குற
நீங்க மட்டும் தான் பெருசு
அரவணைப்பவரே உமக்கு ஆராதனை
ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை
நீங்க தூக்கும் போது
என்ன கொஞ்சும் போது
பேரானந்தம் கொள்கிறேன்
உங்க கண்களில் இருக்கும் போது
உலகை மறக்கிறேன்
உங்க நிழலில் நடக்கும் போது
என்னையே மறக்கிறேன்
இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா
நான் அழும் போது
இல்ல விழும் போது
உம் கரம் என்னை
தேடி வருகுதே
நீர் என்னை பிடிக்கும் போது
பயத்தை மறக்குறேன்
உம் சமுகம் இருக்கும் போது
குறைவை மறக்குறேன்
இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா