நான் எம்மாத்திரம்
Naan Emmathiram Benny Joshua
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம்
என் குடும்பம் எம்மாத்திரம்
நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு - 2
ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2
என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2
தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2