balan yesu unakkaga பாலன் இயேசு உனக்காக
பாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா
1.மந்தையின் நடுவுல
தூதன் வந்து சொல்லிட
மேய்ப்பரெல்லாம் கேட்டிட
பாலன் பிறந்தார்
தாவீதின் ஊர்ல
இம்மானுவேல் பிறந்திட
தூதன் வந்து சொன்னபடி
பாலன் பிறந்தார்
வெள்ளை போளமும் தூபவர்க்கமும்
கொண்டு வந்து தந்தனவே
சாஸ்திரியெல்லாம்
2.பாவமான உலகிலே
பாவிகளை மீட்டிட
பரிசுத்த பாலனாக
இயேசு பிறந்தார்
பரிசுத்த வாழ்க்கைய
வாழ்ந்து காட்டி சொல்லிட
மனிதனாக வந்து இங்கு
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட வந்த தேவனை
ஏழு கண்டமும் அவர் அன்பை கூறுவோம்