dhinam enthan sinna ullam yeanguthae தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
வருகையின் எக்காளத்தைக் கேட்கவே
பறந்து செல்ல ஆச ஆச
இயேசுவோடு பேச பேச
அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்குப் போதும்.
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் க்ரீடம் ஆகும்
1. கவலை இல்லை துயரம் இல்லை
உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை
சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி
ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்
2. ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்
வாடிய வேளையிலே தேடியே வந்தவரே
அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே
அல்லேலூயா பாட்டுபாடி
விண்மீன்கள் கடந்து சென்று
நேசர் இயேசு மடியில் அமர்ந்து
அப்பாவின் மார்பில் சாய்வேன்
அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்கு போதும்
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் க்ரீடம் ஆகும்.