nandriyal en ullam nirainthiduthey நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே
இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி இம்மானுவேலராய் உடன் இருந்தீர்
பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை
1. கேளாத ஐஸ்வரியம் கணமும் எல்லாம் நான் தேடும் முன்பே தந்தவரே
வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே புகழ்ச்சியாலே அலங்கரித்தீர்
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர்
2. எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே
ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர்