kaathiduvaar ennai kaathiduvaar காத்திடுவார் என்னை காத்திடுவார்
காத்திடுவார் என்னை காத்திடுவார்
காலமெல்லாம் என்னை காத்திடுவார்
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கடைசி வரை என்னைக் காத்திடுவார்
அல்லேலுயா அல்லேலுயா
என் இயேசுவுக்கு அல்லேலுயா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே
1. ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்
சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்
வழுவாமல் காத்திடும் வல்லவரே
வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்
2. தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
சேதங்கள் நெருங்காது காத்திடுவார்
தீயவன் அம்புகள் எய்திட்டாலும்
அக்கினி மதிலாக காத்திடுவார்
3. போக்கையும் வரத்தையும் காத்திடுவார்
இயேசுவே அரணாக காத்திடுவார்
கண்களின் மணிப்போல காத்திடுவார்
கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்