unga kirubai thanthu immatum nadaththi vantheer உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்
உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்
உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்
இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்
உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்
இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு
விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர்
பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து
இரட்சிப்பினாலே அலங்கரித்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
ஒன்றுமேயில்லா துவங்கின என்னை
ஒவ்வொரு நாளும் பராமரித்தீர்
இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு
அற்புதங்கள் பல எனக்கு செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு
உபயோகமாக என்னை மாற்றினீர்
உந்தனின் அன்பு உருவாக்குமென்று
என்னையும் நிறுத்தி விளங்க செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்