needa kalam kathiruppadhu நீண்ட காலம் காத்திருப்பது
நீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே
ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே
நம்புவேன் நான் நம்புவேன்
என் இயேசுவையே நான் நம்புவேன்
தாமதங்கள் ஆனாலும் நம்புவேன்
எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன்
சாத்தியமே இனி இல்லை என்றாலும்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும்
சட்டங்களும் மாறினது என்றாலும்
சர்வ வல்ல தேவனையே நம்புவேன்
வறுமையிலும் நான் நம்புவேன்
என் சிறுமையிலும் நான் நம்புவேன்
எதிர்ப்புகள் வந்தாலும் நம்புவேன்
ஏமாற்றம் வந்தாலும் நம்புவேன்
தோல்விகளே வந்தாலும் நம்புவேன்
ஜெயம் தரும் தேவனையே நம்புவேன்
இன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
என் துன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
உயர்வான நிலையிலும் நம்புவேன்
என் தாழ்வான நிலையிலும் நம்புவேன்
வாக்கு மாறும் மனிதரை நம்பிடேன்
தம் வாக்கு மாறா தேவனையே நம்புவேன்
நம்புவோம் நாம் நம்புவோம்
நம் இயேசுவையே நாம் நம்புவோம்