unmaiyulla uzhiyaney உண்மையுள்ள ஊழியனே
உண்மையுள்ள ஊழியனே
என்னை ஏன் மறந்தாயோ
நான் உந்தன் கர்த்தர்
நான் உந்தன் மீட்பர்
நான் உந்தன் நண்பனென்று
(என்னை) மறந்தே போனாயோ
ஆதியில் கொண்ட அன்பை எல்லாம்
ஏனோ மறந்தே போனாயோ
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
உண்மை உள்ளவன் என்றழைத்து
ஊழியம் கையில் தந்தேனே
ஊழியப் பாடுகளை நீ
எனக்காக சகிப்பாயா
சூழ்நிலை எல்லாம் மாறுவதால்
அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ
கருவிலே தெரிந்து கொண்டேன்
உன்னை கைவிடவே மாட்டேன்