ennai belappaduthum devan uyurodirukkiraar என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால்
என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்
சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
வேகமாய் என்னை கட்டுவிப்பார்
என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
அவர் பெலன் இன்றும் குறையவில்லை
பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்