• waytochurch.com logo
Song # 27759

ஆதி முதலாக இருப்பவரே


ஆதி முதலாக இருப்பவரே
ஆரம்பம் ஏதும் இல்லாதவரே
ஜோதி மயமாக இருப்பவரே
கர்த்தாவே… ஆண்டவரே…
முத்தமிழால் போற்றிடுவேன்
எல்லா மொழியினால் உயர்த்திடுவேன்
உமக்கே முதல் கனம்,
உமக்கே முதல் மரியாதை,
உமக்கே முதல் வணக்கம்,
எல்லா துதிகளும் ஏற்றுக்கொள்ளும்
கர்த்தாவே! ஆண்டவரே!
தேவா நீர் வாழ்க!
1. ஒருவராக இருப்பவர் தாம் ஒருவரே ஞானமுள்ளவர்
ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்பவர்
சதாகாலமும் உயிரோடிருக்கும் தேவனைத் தொழுதிடுவோம்
அவர் நாமம் வாழ்க! அவர் அரசு வருக!
அவர் சித்தம் நிறைவேறுக!
தேவா நீர் வாழ்க!
2. சர்வ சிருஷ்டிகர் ஆனவர் சர்வத்தையும் ஆளுகின்றவர்
சேனைகளின் கர்த்தர் என்ற நாமம் உள்ளவர்
சதாகாலமும் உயிரோடிருக்கும் தேவனைத் தொழுதிடுவோம்
அவர் நாமம் வாழ்க! அவர் அரசு வருக!
அவர் சித்தம் நிறைவேறுக!
தேவா நீர் வாழ்க!
3. தாயின் கருவினில் காத்தவர் உள்ளங்கைகளில் வரைந்தவர்
இரவு பகலாக என்னை காத்து வருபவர்
சதாகாலமும் உயிரோடிருக்கும் தேவனைத் தொழுதிடுவோம்
அவர் நாமம் வாழ்க! அவர் அரசு வருக!
அவர் சித்தம் நிறைவேறுக!
முத்தமிழால் போற்றிடுவேன்
எல்லா மொழியினால் உயர்த்திடுவேன்
உமக்கே முதல் கனம்,
உமக்கே முதல் மரியாதை,
உமக்கே முதல் வணக்கம்,
எல்லா துதிகளும் ஏற்றுக்கொள்ளும்
கர்த்தாவே! ஆண்டவரே!
தேவா நீர் வாழ்க!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com