en nesare enthan manavalane என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர்
முற்றிலும் அழகுள்ளவர்
உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்
என் நேசர் என்னுடையவர்
நான் என்றும் உம்முடையவன்
உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலியே
எந்தன் மணவாளியே
என் பிரியமே என் ரூபவதியே
என்று என்னை அழைத்து
என்னை வர்ணிக்கும் என் நாயகனே
உம்மையே சார்ந்து கொண்டு
பரிசுத்தம் காத்துக் கொண்டு
சீயோனில் முகமுகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்