vazvellam nee aaganum வாழ்வெல்லாம் நீயாகனும்
வாழ்வெல்லாம் நீயாகனும்
நினைவெல்லாம் நீ ஆகனும்
1. இருளில் அமர்ந்தேன் ஒளியாய் வந்தீர்
இருள் போக்கும் விடிவெள்ளியே காணாமல்
போனேன் தேடி வந்தீர் என் நல்ல மேய்ப்பன் நீரே
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை
2. மனமுடைந்து நின்றேன் மருந்தாய்
வந்தீர் என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன் பெலனாய் வந்தீர்
எந்தன் கேடகமே
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று எதுவுமே இல்லை