வழியான என் தேவனே
Vazhiyana En Devane
Vazhiyana En Devane
வழியான என் தேவனே
துணையாக வருவார் என்றும்
பெளனானவர் என் அரணானவர் (2)
என்றென்றும் எனை விட்டு விலகதவர்
1. நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு
நிலையான மலை கூட விலகுவதுண்டு – 2
அசையாத அவர் கிருபை
அழியாது அவர் மகிமை – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
2. கருவில் நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக எனைக் காக்கும் கர்த்தர் இவர் – 2
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி துணையானவர் – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
3. முள்ளான பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி அனுபவந்தான் காணும் போதும் – 2
என் இயேசு உடனிருப்பார்
என் பாரம் அவர் சுமப்பார் – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)