vazhi nadathum valla devan undu வழிநடத்தும் வல்ல தேவன் உண்டு
Vazhi Nadathum Valla Devan
வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே
1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி
2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி