vallavare en meetpar neere வல்லவரே என் மீட்பர் நீரே
Vallavare En Meetpar Neere
வல்லவரே என் மீட்பர் நீரே
இயேசு பரனே என் ஜீவ ஊற்றே
ஒரு குறையில்லா வாழ்வு நான் வாழ
குறையற்ற ரத்தம் சிந்தினீரே
ரட்சித்தீரே கிருபையினாலே
ரட்சகரே என் இயேசுவே – 2 (…வல்லவரே)
அப்பா நன்றி ராஜா நன்றி
உம் அன்பு எனை தாங்குதே
அப்பா நன்றி ராஜா நன்றி
உம் அன்பு எனை தேற்றுதே – 2 (…வல்லவரே)
ஊழியம் கொள்ளாமல் ஊழியம் செய்ய
வந்த நேச குமாரனே – 2
இழந்ததை தேடவும் ரட்சிக்கவும்
பூமியில் அவதரித்தீர் – 2 (…அப்பா)
உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த
தேவ ஆட்டுக்குட்டி நீரே – 2
சிலுவையிலும் அன்பை வெளிப்படுத்தி
பலியாக ஈந்தவரே – 2 (…அப்பா)