• waytochurch.com logo
Song # 28118

வல்லமையுடையவர் மகிமையானதை

Vallamaiudaiyavar Magimaiyaanathai


Vallamaiudaiyavar Magimaiyaanathai
வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !
நேற்றும் இன்றும் மாறவில்லையே,
என்றும் மாறிடார் -2


தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் !


1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே
எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே
செயல்களில் மகத்துவமானவரே
கிருபையாய் என் முன் செல்வாரே.


2. சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார்
நிச்சயம் முடிவு எனக்கு உண்டு
பரவச பாக்கியம் அடைந்திடுவேன் !!


3. தேவனின் நகரம் எனக்கு உண்டு
ஆயத்தமாகி காத்திருப்பேன்
பாடுகள் சகித்து வாழ்ந்திடுவேன்
மகிமையின் மகுடம் சூட்டிடுவார் !!


4.தேவனால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உயர்ந்த மதிலையும் தாண்டிடுவேன்
தடைகளை தகர்த்து எறிந்திடுவேன்
சோதனை ஜெயித்து வாழ்ந்திடுவேன் !!


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com