manithanin anbo vinnanathu மனிதனின் அன்போ வீணானது
Manithanin Anbo Vinnanathu
மனிதனின் அன்போ வீணானது
தேவனின் அன்போ மேலானது
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் அசைந்தாலும்
கிருபை மாறாதய்யா
நெருக்கத்தின் பாதையிலே நொறுங்கி போனேனே
வருத்தத்தின் வேளையிலும் வாடி நின்றேனே
கரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரே
காண்கின்ற தேவன் நீரே
குயவனே உம் கையில் களிமண் நானய்யா
வனைந்து என்னையும்
உருவாக்கும் தேவனே
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல
ஆத்துமா வாஞ்சிக்குதே
மனிதன் எனக்கெதிராய் எழும்பும் போதேல்லாம்
மறைவிடமாய் வந்து மறைத்து கொண்டீரே
கண்ணீரும் கவலையும் பெருகிட்ட போதேல்லாம்
கன்மலையாய் வந்திரே அன்பின் கரத்தால் முடினிரே