paraloga geetham பரலோக கீதம்
1. பரலோக கீதம் பாடும் அந்த நாள்
துன்பங்கள் என்னை விட்டு அகலும் அந்த நாள்
மனபாரங்கள் பறந்து ஓடி மறையும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிமையான நாள் – அது (2)
ஆனந்தம் (2) ஆனந்தமே
இயேசுவைச் சந்திக்கும் நாள் ஆனந்தமே
அல்லேலூயா பாடி போற்றிடுவேன்
இயேசுவைக் கண்டு நான் மகிழ்ந்திடுவேன்
2. தூதர்கள் என்னை வரவேற்கும் நாள்
பரிசுத்தர் கூட்டத்தில் நானும் சேரும் நாள்
என் நேசரை முகமுகமாய் தரிசிக்கும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் இன்பமான நாள் -அது (2)
3. நீதி என்னும் ஆடை தரிக்கும் அந்த நாள்
ஜீவ நதி ஓரமாய் உலாவும் அந்த நாள்
ஜீவ கனி புசித்து மகிழும் அந்த நாள்
இயேசுவைச் சந்திக்கும் விந்தையான நாள் – (2)
4. கிரீடங்கள் எனக்குச் சூட்டப்படும் நாள்
வெகுமதிகள் வெகுவாய் பெற்று மகிழும் நாள்
ஜீவ புஸ்தகத்தில் என் பெயரைக் காணும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிழ்ச்சியான நாள் – (2)