• waytochurch.com logo
Song # 28173

பயப்படாதே பாரில் இப்போதே

Bayapathathey Paaril Ipoothae


Bayapathathey Paaril Ipoothae
பயப்படாதே, பாரில் இப்போதே
திகையாதே, கலங்காதே


தெரிந்து கொண்டேன், பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன், நீ என்னுடையவன்


1. தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே


2. அக்கினியில் நீ நடக்கும் போதும்
அஞ்ச வேண்டாம், வேகாதிருப்பாய்
அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது – பயப்படாதே


3. இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே


4. உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும் காத்திடுவேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே


5. முந்தினதை நினைக்கவே வேண்டாம்
பூர்வமானதைச் சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே


6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தை தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே! – பயப்படாதே


7. அல்லேலூயாவுக் கருகனும் நானே!
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்லேலூயா பாடிடுவாயே
வல்ல கரத்தால் நடத்திடுவேனே! – பயப்படாதே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com