• waytochurch.com logo
Song # 28183

naan padumbothu en udhadu நான் பாடும் போது என் உதடு


(நான்) பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்


நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்
எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்
(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

(naan) padumbothu en udhadu
gembeerithu magizhum
neer meetrukkonda en aanma
akkaliththu agamagizhum


nan paduven nan thuthipaen
iravu pagal enneramum
um thuthiyaal en naavu
nirainthu iruppathaaga
naalthorum ummai thuthipaen
nambikkaiyodu thuthippen
eppothum nan thedum
kanmalai neerthaanae
pugalidamum kappagamum
ellaam neerthaanae
(naan) karuvaraiyil irukkumpothu
karthar ennai paramaritheer
(oru) kuraivindri kuzhanthayaaga
veliye neer kondu vantheer
(en) ilamai muthal ithuvarayil
neerae en ethirkaalam
neerthaanae en thalaivar
nokkamum nambikkayum
(naan) muthirvayathu aanaalum
thallividaathavarae
(en) belan kundri pogumbothu
kaividaathavarae

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com