naan payanatravan நான் பயனற்றவன்
Naan Payanatravan
நான் பயனற்றவன்
என்னாலே ஒன்றுமில்லை
உங்க கிருபையில் தான் இன்னும் நிற்கிறேன்
என் திறமை அல்ல
என் பேச்சு அல்ல
என் படிப்பு அல்ல
என் பதவியும் அல்ல
உங்க கிருபையில் தான் இன்னும் நிற்கிறேன்
1. தூக்கி எறியப்பட்டேன்
கண் கலங்கி நின்றேன்
என்னை தேடி வந்தீர் பெரியவனாக்கினீர்
2. அறிமுகம் இல்லாதிருந்தேன்
என்னை அறிய வைத்தீர்
அரியணையிலே என்னை உட்கார செய்தீர்
3. நான் உடைக்கப்பட்டேன்
என்னை உருவாக்கினீர்
உமக்காகவே என்னை வாழவைத்தீரே