Naan Sellum Paathai En நான் செல்லும் பாதை என்
Nan Sellum Paathai En
நான் செல்லும் பாதை என் நேசர் அறிவாரே
நாசம் அணுகாமல் காப்பாரே – 2
1. மரணப் பள்ளத்தாக்கிலும்
நான் வரும் எத்தீமைக்கும் அஞ்சேன் – 2
கருத்தாய்க் காத்திட வாக்குத் தவறிடா
வல்ல ஓர் தேவன் உண்டெனக்கு – 2 (…நான் செல்லும்)
2. கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ
இது தண்ணீர் இல்லாப் பாலை அன்றோ? – 2
கண்ணீரை மாற்றியே சந்தோஷம் பொங்கிடும்
தண்ணீர்த் தடாகமாய் மாற்றிடுவார் – 2 (…நான் செல்லும்)
3. பாடுகள் சகித்த இயேசு
அவர் நடந்த பாதை இதல்லோ? – 2
ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கியே
பாடுவேன் நம்பிக்கையுடனே – 2 (…நான் செல்லும்)
4. மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன்
மேல் விண் வாழ்வின் இன்பத்தை கண்டே – 2
துன்பங்கள் மூலமாய் சுத்தரானோருடன்
பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் – 2 (…நான் செல்லும்)
5. ஆதரவாய் இடை கட்டி
என்னை ஆனந்தமாய் ஓடச் செய்தார் – 2
ஆவி அச்சாரத்தால் புத்திர சுவிகாரம்
ஆளுகையும் அன்று பெறுவேன் (…நான் செல்லும்)
6. மங்கள கீதம் முழங்க
சபை எங்கும் துதிகளைச் சாற்ற – 2
எங்களின் மன்னவன் மங்கிடா நீதியின்
செங்கோலும் ஓங்குமே நித்தியமாய் – 2 (…நான் செல்லும்)
Nan Sellum Paathai En Nesar Arivaare
Naasam Anughaamal Kappare – 2
1. Marana Pallaththaakkilum
Naan Varum Yeththeemaikkum Anjen – 2
Karuththaai Kaaththida Vaakku Thavaridaa
Valla Or Devan Undenakku – 2 (…Nan Sellum)
2. Kanneerin Pallaththaakallo
Idhu Thanneer Illaa Paalai Andro? – 2
Kanneerai Mattriye Sandhosham Pongidum
Thanneer Thadaagamaai Maattriduvar – 2 (…Nan Sellum)
3. Paadugal Saghiththa Yesu
Avar Nadandha Paathai Idhallo? – 2
Oodiye Veeranam Yesuvai Nokkiye
Paaduven Nambikaiyudane – 2 (…Nan Sellum)
4. Mann Vaazhvin Inbam Veruththen
Mel Vinn Vaazhvin Inbaththai Kande – 2
Thunbangal Moolamaai Suththaraanorudan
Ponn Nagaram Sernthu Vaazhuven – 2 (…Nan Sellum)
5. Aatharavaai Idai Katti
Ennai Aananthamaai Oda Seithaar – 2
Aavi Achchaaraththaal Puththira Suvigaaram
Aalugaiyum Andru Peruven (…Nan Sellum)
6. Mangala Geetham Muzhanga
Sabai Engum Thuthigalai Saattra – 2
Engalin Mannavan Mangidaa Neethiyin
Sengolum Ongume Niththiyamaai – 2 (Naan Sellum)