neerallal ivullaginille நீரல்லால் இவ்வுலகினிலே
Neerallal Ivullaginille
நீரல்லால் இவ்வுலகினிலே
சொந்தமாய் நான் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே
1. அழைத்தீரே உந்தனுக்காய்
தாயின் கருவினில் தோன்றுமுன்னே
புது நாமத்தை எனக்களித்து
உமதாவியால் நடத்துகிறீர்
2. சிலுவையில் தொங்கினீரே
பாவ ரோகத்தை அகற்றிடவே
எனக்காக நீர் உயிர் கொடுத்தீர்
உமக்காக நான் உயிர் வாழ்ந்திட
3. கிலேசங்கள் சூழும்போது
நேச அனல் என்னை அணைத்திடுமே
அந்த நிறைவான ஆறுதலை
நித்தம் வாஞ்சித்து ஏங்குகிறேன்
4. ஆத்தும நங்கூரமாய்
என்னோடென்றும் இருப்பவரே
திசை மாறாமல் என் படகை
கரை சேர்ப்பீரே எனதாண்டவா!