neer oruvare neer oruvare நீர் ஒருவரே நீர் ஒருவரே
Neer Oruvare Neer Oruvare
நீர் ஒருவரே (3) துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே (3) கனத்துக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் (4)
நீரே துதிக்குப் பாத்திரர்
நீரே கனத்துக்குப் பாத்திரர்
நீரே மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே(2)
1. துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
தூதர்களால் போற்றப்படும் தூய தேவனே
அகிலத்தையும் படைத்த தேவன் ஒருவரே
துதி கன மகிமை எல்லாம் உமக்குத்தானே
(உம்மை ஆராதிப்பேன் …)
2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
என்றென்றும் ஜீவிக்கின்ற ஜீவ தேவனே
ராஜாதி ராஜாவாய் நீர் வரப்போகிறீர்
மகிமையின் சாயலாய் எம்மை மாற்றப்போகிறீர்
(உம்மை ஆராதிப்பேன் …)
3. பரலோகம் செல்லும் வழியை அறிந்தவர் நீர்தானே
பரிசுத்தமாய் வாழ எம்மை அழைத்தவரே
பாவியை பரிசுத்தனாய் மாற்றும் தெய்வமே
ஆதியும், அந்தமுமாய் இருப்பவரே
(உம்மை ஆராதிப்பேன் …)