neer ennai vittu poonal நீர் என்னை விட்டு போனால்
Neer Ennai Vittu Poonal
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2
தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2
1. புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்)
2. கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்)
3. வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2
(நீர் என்னை)
நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்