neenga illaatha vaazhvum oar vaazhvaahuma நீங்க இல்லாத வாழ்வும் ஓர் வாழ்வாகுமா
நீங்க இல்லாத வாழ்வும் ஓர் வாழ்வாகுமா
உம்மை தேடாத நாளும் ஓர் நாளாகுமா
இயேசைய்யா இயேசைய்யா
உம் பிள்ளை நானைய்யா
உம்மோடு நடந்தால் ஆனந்தம்
உம்மோடு இருந்தால் பேரின்பம்
தன்மையினால் என் வாயை நிரப்பும்
நல்லவரே என் இயேசய்யா
உம் வசனம் எனக்கு ஆனந்தம்
உம் சமூகம் எனக்கு பேரின்பம்
வார்த்தையினால் என் வாழ்வை வளமாக்கும்
நல்லவரே என் இயேசய்யா
உம் சத்தம் எனக்கு ஆனந்தம்
உம் சித்தம் எனக்கு பேரின்பம்
சித்தம் செய்து சீயோனில் சேர
சுத்தம் செய்யும் என் இயேசய்யா