theengai kaanaathirupaai தீங்கை காணாதிருப்பாய்
Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4
அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை
1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை
2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை
3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை