சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
Sonna Sollai Kaappattrum Deivam
Sonna Sollai Kaappattrum Deivam
சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
உம்மையன்றி யாரும் இல்லை
முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
உங்களுக்கு ஈடே இல்லை
நீர் சொல்லி அமராத
புயல் ஒன்றை பார்த்ததில்ல
நீர் சொல்லி கேளாத
சூழ்நிலை எதுவுமில்ல
ஆராதனை ஆராதனை
சொன்ன சொல்லை காப்பாற்றும்
இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே
நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
கைவிட மாட்டேன் என்றீர்
நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
வாய்க்காலாய் வருபவரே
சொன்னதை செய்யும் அளவும்
கைவிட மாட்டேன் என்றீர்
இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
தேசத்தின் தலையாக்கினீர்
பூர்வத்தில் அடைபட்டதை
எனக்காக திறந்து வைத்தீர்
ஒரு மனிதனும் அடைக்க முடியாத
ரெகொபோத்தை எனக்கு தந்தீர்