சிங்காசனத்தில் வீற்றாளும் ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே
Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare
Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare
சிங்காசனத்தில் வீற்றாளும்
ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே
மூப்பரும் நான்கு ஜீவன்களும்
எந்நாளும் போற்றுவாரே
கோரஸ்:
துதியும் கனமும்
மகிமையும் வல்லமையும்
புகழும் ஞானமும்
பெலனும் ஐஸ்வரியமும்
எந்நாளும் உம் ஒருவருக்கே
எல் எலியோன் உம் ஒருவருக்கே
ஆராதனை ஆராதனை
ஆட்டுக் குட்டியானவரே
ஆராதனை ஆராதனை
அல்பா ஒமேகாவுமானவரே
1. கோடான கோடி பரம சேனை
தொழுதிடும் எங்கள் தூயவரே
பரிசுத்தனாக்கி உமக்கு முன்
துதிகள் பாட நிறுத்தினீரே
2. வானங்களில் உயர்ந்தவரே
உம் நாமத்தை புகழ்ந்திடுவோம்
ஆவியோடும் உண்மையோடும்
முழு மனதாய் துதித்திடுவோம்