keytaal koduppen கேட்டால் கொடுப்பேன்
Keytaal Koduppen
கேட்டால் கொடுப்பேன்
கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார்
ஜெபித்தால் ஜெயமே
சித்தம் போல் அவர் பதிலளிப்பார்
1. அன்பின் ஆவியினால்
அகமே நிறைந்தே
அனலாக ஜெபித்திடுவோம்
அவிசுவாசங்களோ
அணுகாமலே நாம்
அவர் வார்த்தையை பற்றிக் கொள்வோம்
அவர் அதிசயம் நடத்திடுவார்
2. கர்த்தர் பாதத்திலே
நம்மைத் தாழ்த்திடுவோம்
குற்றம் யாவும் அறிக்கை செய்வோம்
கபடம் இல்லாத
உதட்டில் பிறக்கும்
கிருபை மிகும் ஜெபம் கேட்பார்
கண்ணிர் யாவையும் துடைத்திடுவார்
3. நினையாத நேரம்
இயேசு வந்திடுவார்
நிதம் விழிப்பாய் ஜெபித்திடுவோம்
அஸ்திபாரமுள்ள
மூலைக்கல் சீயோனில்
அழகாகவே ஜொலித்திடுதே
அதை நம்பி ஜெயம் பெருவோம்