kaalangal maaridum காலங்களும் மாறிடும்
Kaalangal Maaridum
1. காலங்களும் மாறிடும்
மானிடரும் மாறிடுவார்
மாறிடாத இயேசு தேவன்
தேடுகிறார் இன்றும் உன்னை
அழைக்கிறார் அழைக்கிறார்
இயேசு உன்னை அழைக்கிறார்
2. பாவம் செய்யும் ஆத்துமா
சாகும் என்று அறிவாயா
சாபமெல்லாம் நீக்கிடுவார்
இயேசுவையே நோக்கிடுவாய்
3. மாயை வாழ்வை நம்பிடாதே
கானல் நீராய் மறைந்திடுமே
தாயைப் போல தேற்றிடுவார்
நீயும் இன்றே வந்திடுவாய்
4. விண்ணில் இயேசு தோன்றிடும் நாள்
வேகம் அதோ வந்திடுதே
சென்றிடுவோம் அவர் சமூகம்
சேதமின்றிக் காத்திடுவார்