kaathirukkum umakkaga காத்திருக்கும் உமக்காக
காத்திருக்கும் உமக்காக
என் மனமே ஆவலாக
இமைகளும் மூடாமல்
சிறிதளவும் சலிக்காமல்
உமது விருப்பம் செய்வதே
நான் தரும் கனமே
அதற்கு உகந்த பரிசு
நீர் தரும் புண்ணிய கனமே
எனது மணவாளன் நீர்
எனக்காக வந்திடுவீர்
ஒவ்வொரு கண்ணீருக்கும்
அந்நாளில் பலன் கிடைக்கும்
இதயத்தை மயக்கிடும்
உலகத்தின் இன்பங்கள்
நீர் தரும் ஈவுக்கு
இணையில்லையே
ஆசைகள் தூண்டிடும்
பாராட்டு மேடைகள்
என் பெயர் நீர் சொல்லும்
நிலை போல் இல்லையே
தியாகங்கள் செய்தாலும்
உண்டு வெகுமதியே
உமக்காக எந்நாளும்
எரியும் என் தீயே
உம் நாமம் வேண்டும்படி
நான் உந்தன் மணவாட்டி
கறை இல்லையே என் இயேசுவே
போதும் போதும் நம் உறவே-எனது மணவாளன்