kadantha naatkalil nadathineerae கடந்த நாட்களில் நடத்தினீரே
Kadantha Naatkalil Nadathineerae
கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணிபோல் என்னை காத்தீரே (2)
என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்
என் தேவனே நான் உம்மை பாடுவேன் (2)
1.புது ஜீவன் தந்தீரே
எனக்கு புதுவாழ்வு அளித்தீரே
புது பெலன் தந்தீரே
என்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே
2.கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதே
கண்ணீர் விடுவதினால்
உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே
3.எரிகோவை இடித்தவரே
எகிப்தை வென்றவரே
எனக்குள்ளே இருப்பவரே
வெற்றியை தருபவரே – என் இயேசுவே
4. மகிழ்ச்சியின் தொனியோடே
ஆர்ப்பரித்து முழங்கிடுவேன்
கர்த்தரை ஆராதித்து
அவர் நாமத்தை உயர்த்திடுவேன் – என்
இயேசு தருவார் வெற்றி தருவார்
உன் வாழ்வில் நிச்சயமே
இயேசு தருவார் வெற்றி தருவார்
நம் வாழ்வில் நிச்சயமே
வருகின்ற நாட்களை ஆசீர்வதிப்பீர்
வெற்றியின் வழியாய் நடத்திடுவீர் (2) – என்